Newskadai.com
தமிழ்நாடு

நீட் தேர்வில் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி… வெற்றிக்கான காரணம் என்ன தெரியுமா?

NEET
Share this:

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. Marvel Educare-ல் பயின்ற மாணவி எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான http://ntaneet.nic.in/ இல் பார்க்கலாம். கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.இதன்படி நீட் தேர்வு மீண்டும் 14ம் தேதி நடைபெற்றது ஏற்கனவே தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. தேர்வை தவறவிட்ட மாணவ மாணவியர் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த தேர்வை எழுதினர். சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. Marvel Educare-ல் பயின்ற மாணவி எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கடந்த முறை பெற்ற முதல் மதிப்பெண்களை விட இந்த முறை மாணவி சஞ்சனா கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் அவர் தான் மாநிலத்தில் முதலிடம் பெற்றவாராக இருப்பர் எனக்கூறப்படுகிறது.

NEET

இதுகுறித்து மாணவி சஞ்சனா கூறியுள்ளது, “நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. கே.கே நகர் PSBB பள்ளியில் படிக்கும் போதே அதற்கான திட்டமிடலுடன் படித்தேன். அதற்கேற்ப Marvel Educare-ன் நீட் ரேங்க் பூஸ்டர் ப்ரோகிராம் மூலம் படித்தேன். அங்கு எனக்கு கொடுத்த சரியான பயிற்சி எனக்கான வெற்றியை தேடி தந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியதோடு மட்டுமில்லாமல், திறமையை நம்பி பயிற்சியளித்த அகிலன் சாருக்கு நன்றி” என கூறினார்.


“சஞ்சனா ஆர்வமாக படிக்கக் கூடியவர். மருத்துவக்கனவை நோக்கிய அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. நீட் தேர்வை எதிர்கொள்ள கொடுத்த எல்லா பயிற்சி வகுப்புகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டு, தேர்வு நடைமுறைகளை பற்றி தெரிந்துக் கொண்டார். தொடர்ச்சியாக தேர்வு எழுதி பழகியதன் மூலம், நீட் தேர்வில் நிச்சயம் வெல்வார் என நினைத்திருந்தேன். அதன்படி இப்போது வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரியான பாதையை அமைத்து கொடுக்கும் முயற்சிக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாக”, Marvel Educare நிறுவனர் CP அகிலன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: http://கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்… கேகேஆர் அணியில் என்னதான் நடக்கிறது..!!

கடந்த ஆறு வருடங்களாக சிபிஎஸ்இ தேர்வில் 490 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை அகிலன் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் பெற்று சாதனை புரிந்து வருகிறது. தற்போது மருத்துவம் பயிலும் கனவுக்கு பெரும் அச்சுறுத்தலாக நீட் தேர்வு உருவெடுத்துள்ளது. அந்த அச்ச உணர்வில் இருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வந்து, அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் நம் அகிலன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு Marvel Educare என்னும் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறோம் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். (https://marveleducare.net/contact.html) 

*Sponsored Content


Share this:

Related posts

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

MANIMARAN M

குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

10ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதும்… காத்திருக்கிறது அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

NEWSKADAI

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

AMARA