Newskadai.com
தமிழ்நாடு

மத்திய அரசே கேட்கல உங்களுக்கு என்ன?… தமிழக அரசின் இ-பாஸ் நடைமுறையால் சூடான உயர் நீதிமன்றம்…!

Edappadi palaniswami
Share this:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கிடையேயும், மாவட்டங்களுக்கிடையேயும் செல்ல மக்களுக்கு இ-பாஸ் நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு தமிழக அரசு அடுத்தடுத்து தளர்வுகளை அறிவிக்கும் போது இ-பாஸ் முறையை ரத்து செய்து உத்தரவிட்டது.

Epass

ஆனால் இந்த நடைமுறை தமிழகத்திற்குள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: http://அப்பாவிடம் பணத்தை ‘அபகரிக்க’ திட்டம்… 13 வயது மகன் போட்ட பகீர் ‘ஸ்கெட்ச்’… திடுக்கிட வைக்கும் தகவல்கள்…!

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்ற போது மத்திய அரசே இ-பாஸ் நடைமுறைகள் தேவையில்லை என்ற போதும், தமிழக அரசு வலியுறுத்துவது ஏன்?, மாநிலங்களுக்கிடையே பயணம் செய்ய தேவை இல்லாமல் இ-பாஸ் கேட்பது ஏன்? என சரமாரி கேள்விகளை முன்வைத்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.


Share this:

Related posts

செஞ்சூரி அடித்த மேட்டூர் அணை… சிறப்பு பூஜை நடத்திய அதிகாரிகள்..!!!

THAVAMANI NATARAJAN

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

NEWSKADAI

“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…

MANIMARAN M

“நீட் தேர்வை கட்டாயம் எழுதி தான் ஆகனும்”… சேலத்தில் கொந்தளித்த பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN