Newskadai.com
சினிமா

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Surya
Share this:

தமிழகத்தில் தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இருப்பினும் கடந்த 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு முன்பாக மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும், விழிப்புடன் இருக்க வேண்டும் “ எனவும், நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகம் பலரும் பேச ஆரம்பித்தனர். குறிப்பாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது: என சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அந்த கருத்தால்  நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில் சூர்யாவிற்கு ஆதவு அளிக்கும் வகையில் ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரண்டானது.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில்,  ” கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா  ” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளில் சாதியை பற்றி குறிப்பிடுவது அமைதியாக வாழும் மக்களிடையே சாதி பிரச்சனை கிழப்புவதாக உள்ளது. இதுபோன்ற பாடல் சமூகத்தினரிடையே பிரச்சனையை  ஏற்படுத்தும் என்பதால் 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு 5 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது என்றும், தற்போது நீட் பற்றி பேசியதற்காக சூர்யாவை பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவருடைய ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை… இரண்டு நடிகைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட பிரபல இயக்குநர்…!!

NEWSKADAI

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…!!

AMARA

கொடைக்கானலில் கும்மாளம்… நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்குப்பதிவு…!

NEWSKADAI

திரும்பி வருவாரா எஸ்.பி.பி?… கண்ணீர் மல்க பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா…!

NEWSKADAI

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M