Newskadai.com
தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

Share this:

கொரோனோ தொற்றினால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிபதை தொடர்ந்து மக்கள் அதிகமாக வெளியில் நடமாடமலும்,  கடைகள் திறக்கப்படாததாலும், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்றவர்கள் உணவு இல்லாமல் மிகவும் சிரமத்தில்  உள்ளனர். சென்னையில் தொற்று குறைந்து கொண்டிருந்தாலும் பிற மாவட்டங்களில் அதிகரித்து கொண்டிருப்பதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் உணவின்றி சுற்றி வருவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரும் உள்ளனர்.

அவர்களுக்கு போதிய உணவு மற்றும் தங்குமிடம் இல்லாததால் மிகவும் அவதிப்பபடுகிறார்கள் என சுட்டிக்காட்டினார். தமிழக அரசு  அவர்களை கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி குணப்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தார்.

இந்நிலையில் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட.அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து பொது இடங்களில்  சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை முகாம்களுக்கு அனுப்பி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் , அவர்களுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் வரும் 18 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Share this:

Related posts

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA

இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது பல்கலைக்கழகம்…!!

AMARA

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

AMARA