Newskadai.com
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

Share this:

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் காற்று நீர் மண் மாசுபாடு அடைவதாகவும் அதனால் அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவித நோய்கள் ஏற்படுவதாகவும்  கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது. போராட்டத்தால் திணறிய அரசு மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாயினர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. வேறு வழியில்லாமல் தமிழக அரசு கடந்த 2018 மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குப் போட்டது. இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. வேதாந்தா நிறுவனமும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றமோ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுத்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. மேலும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க 815 பக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.


Share this:

Related posts

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

THAVAMANI NATARAJAN

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M

நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M