Newskadai.com
சினிமா

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

Chakra
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், அனுஷ்காவின் நிசப்தம் உட்பட பல படங்கள் ஓடிடி எனப்படும் ஆன்லைன் தளங்களில் வெளியாக உள்ளது. இதையடுத்து தனது சக்ரா திரைப்படமும் தீபாவளி விருந்தாக நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான விஷால் தெரிவித்திருந்தார்.

Chakra

இயக்குநர் எழிலியின் உதவியாளரான ஆனந்த் இயக்கியுள்ள சக்ரா திரைப்படம் கிட்டதட்ட 90 சதவீதம் வரை படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது. இதில் விஷாலுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதில் அப்பாவின் அசோக் சக்ரா பதக்கத்தை தேடிச் செல்லும் ராணுவ அதிகாரியாக விஷால் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ரவீந்திரனுக்கு ரூ.8.29 கோடியை திருப்பித் தருவதாகக் உறுதி அளித்துள்ளார், ஆனால் அவரை நிறைவேற்றவில்லை எனக்கூறப்படுகிறது.

மேலும் இயக்குர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது அவர் விஷாலை வைத்து சக்ரா என்ற தலைப்பில் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன் நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் படத்திற்கு தடை கோரி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், தங்களது நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.8.29 கோடியை விஷால் திரும்ப செலுத்த வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட சக்ரா படத்தை இயக்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை “சக்ரா” திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர்.


Share this:

Related posts

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

அமைதியாக இருந்த அஜித்தையே சீண்டிவிட்டாங்களே… வெகுண்டெழுந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை…!

AMARA

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

AMARA

உங்கள நினைச்சி சிரிக்கிறதா? கோவப்படுறதா? தெரியலையே சேதுபதி… மடலில் மறைமுகமாக சாடிய பாரதிராஜா…!

NEWSKADAI

மீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி… என்ன குழந்தை தெரியுமா?

NEWSKADAI