Newskadai.com
தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

Share this:

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா பிரச்சனை என்று முடிவுக்கு வரும் என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள் தற்போது கிடைத்த தளர்வுகளால் வெளிக்காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மக்களிடம் அழுத்தங்கள் உருவாகியுள்ளது. இதை போக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இது ஒருபுறம் என்றால் தமிழகத்திலும், அதன் தலைநகரான சென்னையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது, அதன் படி இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 709 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் பலி எண்ணிக்கையும் 6007 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இன்று 5 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் சென்னையைப் பொறுத்தவரை கடந்த வாரம் 500, 600 என குறைந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று உச்சகட்டமாக 1,182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 017 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

POONKUZHALI

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M