Newskadai.com
தமிழ்நாடு

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

Share this:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீயாய் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,993 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை ஒரே நாளில் 1,138 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,62,249 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 77 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது.

Collector

மேலும் படிக்க: http://காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த இந்துக்கள்… மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

இப்படி அடுக்கடுக்கான சோதனைகள் தொடர்ந்து வந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே மாதம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அலுவலகத்தில் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ஒட்டுமொத்த ஆட்சியர் அலுவலகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: http://கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனை ஆட்சியர் சீதாலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்று ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் ஆட்சியர் சீதாலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

THAVAMANI NATARAJAN