Newskadai.com
தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட் திறந்தாச்சு. வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

Share this:

கொரனோ (covid -19) தொற்று காரணமாக கடந்த மே மாதம் கோயம்பேடு காய்கறி கடைகள், பழம், மலர் அங்காடி களை தற்காலிகமாக மூடி உத்தரவிட்டது தமிழக அரசு. இதனை தொடர்ந்து காய்கறிகள் மார்க்கெட் திருமழிசை பகுதிக்கும், பழ அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்க்கும் மாற்றப்பட்டது.

புரோனோ பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து வியாபார நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் இயங்கிவரும் நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறக்க அனுமதி அளித்தது.

அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று மாலை கோயம்பேடு மார்க்கெட் அங்காடியை முதன்மை அலுவலர் கோவிந்தராஜூ திறந்து வைத்தார். நள்ளிரவு முதல் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வருகை புரிந்தன. நான்கு மாதங்களுக்குப் பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டதில் கடை உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this:

Related posts

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M

கொரோனா தொற்று இல்லை… நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு…

MANIMARAN M

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN

ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

அரிசி, பருப்பு வாங்க எவ்ளோ நேரம் நிக்கிறது..? சாலை மறியலில் இறங்கிய பொது மக்கள்…

MANIMARAN M

தாலி சங்கலிக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி… ஹாஸ்பிட்டலில் அவிழ்த்துவிட்ட புளூகு மூட்டைகள்…!

THAVAMANI NATARAJAN