Newskadai.com
இந்தியா

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

Share this:

இந்திய குடிமக்களின் அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு அமைந்துள்ளது. இதுவரை இலவசமாக மேற்கொண்டு வந்த ஆதார் கார்ட் திருத்தங்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்துள்ளது. இது குறித்து யூஐடிஏஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இனி முகவரி திருத்தங்களுக்கு ரூ. 50 கட்டணமும், பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு ரூ. 100 வசூலிக்கப்படும், இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும், ஆதாரில், பெயர் திருத்தங்களுக்கு 32 ஆவணங்களும், முகவரி திருத்தங்களுக்கு 45 ஆவணங்களும், பிறந்த தேதி திருத்தங்களுக்கு 15 ஆவணங்களும் அடையாள சான்றுகளாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக சமர்ப்பித்து திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


Share this:

Related posts

நாட்டையே உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு: முக்கிய புள்ளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!

NEWSKADAI

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

MANIMARAN M

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

MANIMARAN M

பெங்களூர் கலவரம்: இந்து கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்… நெகிழ்ச்சி வீடியோ…!!

AMARA

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M