Newskadai.com
தமிழ்நாடு

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

Rain
Share this:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் உள்ள அனைகளில் நீரின் மட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே உள்ள அருவிகள், ஏரிகள், குலம், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.   இதனை தொடர்ந்து 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுதத 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கிளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சேலம், நாமக்கல் கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

Rain

மேலும் புதுவை, காரைக்கால் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி ,திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமான மழை பெய்யக்கூடும். அந்தாமான் ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் அக்டோபர் 9 அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதற்கடுத்து 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும் படிக்க : http://இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சூராவளி காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Share this:

Related posts

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

மோடி பிறந்த நாளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… 13 பேர் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

டிவி சுவிட்ச்சை ஆன் செய்த போது விபரீதம்.. 11 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…

THAVAMANI NATARAJAN

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

MANIMARAN M