Newskadai.com
தமிழ்நாடு

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

Share this:

கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரத்னா விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். தெருவோரம் நடந்த சென்ற அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். அதில் ஒருவன் மட்டும் வாகனத்திலிருந்து இறங்கி வந்து ரத்னாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றிருக்கிறான். இதனை சற்றும் எதிர்பாராத ரத்னா சுதாரித்துக் கொண்டு அவனை வேகமாக கீழே தள்ளி விட்டு சத்தம் போட்டு உதவி கேட்டுள்ளார்.

ரத்னா சத்தம் போடவே இரு சக்கர வாகனத்தில் அந்த இருவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர். அதற்கிடையில் ரத்னாவின் சப்தம் கேட்டு ஓடி வந்த பொது மக்கள் அந்த இருவரையும் மடக்கி பிடித்து அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் இருவரையும் பிடித்து விசாரித்ததில் அந்த இருவரும் போத்தனூரைச் சேர்ந்த அப்துல் ரகூப் மற்றும் ரத்துல் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவ்விருவரையும் காவல் துறையினர் பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


Share this:

Related posts

மூணாறு நிலச்சரிவு: தமிழக குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

NEWSKADAI

கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சத்தை ஆட்டைய போட்ட இன்ஜினியர்… கைது செய்ய உதவிய ஹெல்மெட்..!!!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: ஆன்லைன் ‘டெலிவரி பாய்’ உருவில் இப்படியும் ஆபத்து இருக்காம்… ‘எச்சரிக்கும்’ காவல்துறை…!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

தர்மபுரியில் 20 வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியை… அம்பலமானது உண்மை..!!!

THAVAMANI NATARAJAN