தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் (BRANCH POSTMASTER/ASSISTANT BRANCH POSTMASTER/DAK SEVAK)ஆகிய பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஏற்கனவே வேலை பார்த்த முன் அனுபவம் உள்ளவர்கள், முன் அனுபவம் இல்லாதவர்கள் என அணைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதள முகவரி தரப்பட்டுள்ளது.

2020 ம் ஆண்டின் வேலைவாய்பிற்க்கான காலியிடங்கள் சுமார் 5,282 இடங்கள் உள்ளது. கிராமின் டக் சேவக் ((GDS) பணிக்கு 3612 காலியிடங்கள் உள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். GDS பணிக்கு சம்பளம் ரூ.10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் தமிழகம் முழுவதும் இருப்பதால் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் அதே மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பணி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தகுதி உடையவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். விண்ணப்பிக்க https://appost.in/gdsonline/Home.aspx என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30 தேதி ஆகும். மேலும் விரிவான தகவல்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பார்க்கவும்.