Newskadai.com
இந்தியா

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

Share this:

உலகையே முடக்கிப் போட்டிருக்கும் COVID-19 கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் இறுதி கட்ட பரிசோதனை முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது. இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட பரிசோதனையில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு ஆய்வில் உள்ளது. இந்த பரிசோதனை வெற்றி அடையும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது வரும் ஆண்டு முதலிலோ மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு பின் இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்களுக்குக் கொரோனா தடுப்பூசியை விலைக் குறைவாக கிடைக்கும் வகையில் சீரம் நிறுவனம் உற்பத்தியை தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ரஷ்யா உருவாக்கியுள்ள கொரோனாவுக்கான தடுப்பூசியை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு இன்று ஆலோசனை செய்யவுள்ளது. பின்னர் இந்த தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மது வழங்கப்படும் – அரசின் அதிரடி அறிவிப்பு

AFRIN

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA

உச்சகட்ட பாதுகாப்பில் அயோத்தி… களைகட்டும் ராமர் கோயில் பூமி பூஜை…!!

THAVAMANI NATARAJAN

மறியல் செய்யும் காண்டாமிருகம் : அசாமில் நடப்பது என்ன?

NEWSKADAI

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

NEWSKADAI

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M