Newskadai.com
தமிழ்நாடு

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

Share this:

திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பறை வசதிகள், திறந்த வெளியில் மலம் கழிப்பது, குப்பை மறுசுழற்சி போன்ற தூய்மை பணியின் அளவுகோலை கொண்டு தூய்மையான நகரங்களின் தர வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

 

இதனடிபடையில் இந்த ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை வீடு மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவித்தார். இதில் மத்திய பிரதேசதிதின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளும் இந்தூர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. இரண்டாவது இடத்தில் சூரத் நகரும், மூன்றாவது இடத்தில் நவி மும்பை நகரும் இடம் பிடித்துள்ளன.

2019 ஆம் ஆண்டில் வேகமாக தூய்மையடைந்து வரும் மாநகர் என்ற விருதை பெற்று சென்னை தர வரிசை பட்டியலில் 69-ஆம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 312-வது இடத்திற்கு சென்றுள்ளது. இது சென்னை தூய்மையை இழந்து வரும் சூழலை எடுத்துக் காட்டுகிறது.

மக்கள் தொகை அதிகரித்தும், மிக நெருக்கமான சூழலில், மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தூய்மை பணியின் அவசியத்தை இந்த ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. 47 நகரங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மையான நகரம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40-வது இடத்தில் கோவையும், 45-வது இடத்தில் சென்னையும் இடம்பெற்றுள்ளன.


Share this:

Related posts

திருமணமாகி 28 நாட்களே ஆன புதுபெண் தூக்கிட்டு தற்கொலை :

NEWSKADAI

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு…!

AMARA

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

MANIMARAN M

நாகை எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி… அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

POONKUZHALI

கொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

AMARA

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M