Newskadai.com
இந்தியா

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

Share this:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை  மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் அதில்  பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என திட்டவட்டமாக  அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க  அனுமதியில்லை என அறிவித்திருந்தது.  இதனால் பல பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக  பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் மனிதவள  மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு  கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா  முழுவதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை  திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  சமூக இடைவெளியுடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் கல்வி ஆண்டைத் தொடங்க முதலில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால்  அதிகரித்து வரும்  கொரோனா தொற்றின் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகளை திறப்பதில் சிரமம் ஏற்படுவதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி 416 கேந்திரிய வித்யாலயாக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன. இந்த அடிப்படையில் தான் பள்ளிகளை டிசம்பர் வரை  திறக்க வேண்டாம் என்ற பரிந்துரையை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் காரே கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி  இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும்.

கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து  வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.  இருப்பினும் இந்தாண்டின் கல்வி முடிவை ” zero academic year “ ஆக அறிவிப்பதாக இல்லை என உயர்கல்வி செயலர் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து  மாநிலத்தின் கொரோனா  தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாநில அரசுகளே  கல்வியாண்டு தொடங்கப்படும் முடிவை எடுத்துக்கொள்ளலாம் என மனிதவள மேம்பாட்டு  அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

கோயிலுக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம்… 3 காவலாளிகளை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பல்…!!

MANIMARAN M

“இதுவரை பக்க விளைவுகளே இல்லை”… இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து…!!

MANIMARAN M

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M