Newskadai.com
இந்தியா

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

Share this:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் அதில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதியில்லை என அறிவித்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பகுதி வாரியாக வகுப்புகளை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

School

அதன் படி, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதல் 15 நாட்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 6 முதல் 9 வகுப்புகள் செயல்படத் தொடங்கும்.

இரண்டு மாணவர்களுக்கிடையே 6 அடி தூர இடைவெளி, கட்டாய முகக்கவசம், விளையாட்டு போட்டிகள், காலை இறை வணக்க கூட்டம், மாணவர்களுக்கான விளையாட்டு நேரங்களுக்கு அனுமதியில்லை. அதேபோல் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் முதல் ஷிப்ட்டும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் இரண்டாவது ஷிப்ட்டும் என இரண்டு வேளையில் பள்ளிகள் நடைபெற உள்ளன. பள்ளிகளில் 33 சதவீத ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி.


Share this:

Related posts

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN

இந்தியாவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்… அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

N-95 மாஸ்க் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது… அதிர்ச்சி தகவல்…!!

NEWSKADAI

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M