Newskadai.com
தேர்டு ஐ

தணிக்கைக்கு உட்படுத்தப்படுமா வெப் சீரிஸ் – மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர காரணம் என்ன?

social media
Share this:

அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் போன்ற OTT இணையதளங்களுக்கும் இணையதள செய்தி நிறுவனங்களுக்கும் தணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாததால் சுதந்திரமான முறையில் தங்களது படைப்புகளை, செய்திகளை வெளியிட்டு வந்தன. திரைப்படங்களுக்கு தணிக்கை இருப்பதால் திரைப்படங்களில் இடம் பெறமுடியாத படுக்கையறை காட்சிகளும் வன்முறை காட்சிகளும் அந்தரங்க காட்சிகளும் வெப்சீரிஸ் எனப்படும் இணையதள தொடர்களில் தாராளமாகவே கட்டப்பட்டு வருகின்றன.

social media

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் பலவகைப்பட்ட விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பல முன்னணி இயக்குனர்களுக்கு இணையதள தொடர்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. திரைப்படங்களில் சொல்லமுடியாத நீண்ட கதைகள், அரசியல் சமூகம் சார்ந்த மாறுபட்ட படைப்புகளை வழங்குவதற்கு இந்த OTT இணைய தளம் மேடை அமைத்துக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. முன்னணி நடிகர் நடிகைகளும் இயக்குனர்களும் இணையதள தொடர்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

social media

மேலும் படிக்க : #SooraraiPottru படம் எப்படி இருக்கு…!! சூரரைப்போற்று விமர்சனம்…

தற்பொழுது மத்திய அரசு வழக்கம்போல ஒரு அவசர சட்டத்தின் மூலம் OTT இணையதளங்களையும் இணையதள செய்தி நிறுவனங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த அமைச்சகத்தின் கீழ் தான் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இனிவரும் காலகட்டங்களில் OTT தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுமோ என்ற அச்சம் படைப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.


Share this:

Related posts

SCRIPT & ACTING : இணையவழி ’பிரதி மற்றும் நடிப்பு’ கருத்தரங்கம்…

NEWSKADAI

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பில்லையா? … ஆபாச போஸ்டருக்கு எப்படி அய்யா அனுமதி கொடுத்தீங்க…!

NEWSKADAI

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

இந்தியத் தத்துவம் – யசூர் வேத சம்கிதை

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

NEWSKADAI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI