Newskadai.com
இந்தியா

மத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்களும் மாதம் ரூ.3 ஆயிரம் பெறலாம்… வழிமுறைகள் உள்ளே…!!

Share this:

மத்திய அரசு விவசாய மற்றும் ஏழை எளிய மக்களுக்கள் பயனடையும் வகையில் பல்வேறான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விவசாய கடன் அளித்தல், ஓய்வூதியம், போன்ற சலுகைகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2019 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் ஸ்ராம் யோகி மந்தன் திட்டம் முறைசாரா துறை ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் இத்திட்டத்தை அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 60 வயதை அடைந்தவருக்கு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3.000 அளிக்கப்படும். இதற்கான தகுதி முறையானது முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவரும் மாத வருமானம், ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாகவும், 18- 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருந்தால் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவரார்.

ஆனால் விண்ணப்பதாரர் வருமான வரி செலுத்துபவராகவோ, அல்லது தேசிய ஓய்வூதிய திட்டம், ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் போன்ற வேறு எந்த திட்டங்களுக்கும் உட்பட்டிருக்ககூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு சந்தாதாரரும் 60 வயதை அடைந்தவுடன் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 3,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஒருவேலை சந்தாதாரர் 60 வயதிற்கு முன்பே இறந்துவிட்டால், அவரது துணைவியார் இந்தத் திட்டத்தை தொடர வாய்ப்பு கிடைக்கும். மேலும் இதன் முழுவிபரம் அடைய அருகிலுள்ள பொதுவான சேவை மையங்களுக்கு (சி.எஸ்.சி) சென்று பதிவு செய்யவும்.


Share this:

Related posts

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

டிஸ்லைக்குகளை குவிக்கும் பிரதமரின் வீடியோக்கள்… அழுகுனி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக…!!

MANIMARAN M

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

NEWSKADAI

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்…

MANIMARAN M

உச்சகட்ட பாதுகாப்பில் அயோத்தி… களைகட்டும் ராமர் கோயில் பூமி பூஜை…!!

THAVAMANI NATARAJAN

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இந்தியாவிலும் நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை…!!

MANIMARAN M