Newskadai.com
இந்தியா

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

PUBG
Share this:

கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து டிக்டாக் யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து சீனாவுக்கு எதிரான பொருளாதர நடவடிக்கையை மேற்கொண்டது இந்திய அரசு. இந்தியர்களின் தகவல் பாதுகாப்பிற்காக அந்த சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போது PUBG ஆன்லைன் விளையாட்டு செயலி உட்பட 118 செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

PUBG

பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து அதன் அடிப்படையில் நடத்திய கண்காணிப்பில் அவை பயனர்களின் தகவல்களை திருடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பப்ஜி கேம், கட் கட், பாய்டு, ஃபேஸ் யு, இன் நோட், வூவ் மீட்டிங், சூப்பர் கிளீன், வீசாட் ரீடிங், கவர்ன்மெண்ட் வீசாட், சைபர் ஹண்டர், ரைஸ் ஆஃப் கிங்டம்ஸ், டேங்க் டங்க்ஸ், கேம் ஆஃப் சுல்தான்ஸ், ஆப் லாக், மியூசிக் எம்பி3 ப்ளேயர் உள்ளிட்ட 118 செயலிகளை முடக்கியிருப்பதாக இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது முடக்கப்பட்ட செயலிகளில் பல சீனாவை மையமாகக் கொண்டு இயங்கி வருபவை. இதில், மிகவும் பிரபலமானது PUBG ஆன்லைன் விளையாட்டு செயலி. இந்தியாவில் 33 லட்சம் பயன்பாட்டாளர்கள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பொது ஊரடங்கு மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தினால், மாணவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக பெற்றோர்கள் கவலைத் தெரிவித்தனர்.

இந்த விளையாட்டு மூலம் பல சிறுவர்கள், மாணவர்கள், வீட்டில் இருந்து பணத்தைத் திருடியும் வங்கிக் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மூலம் விளையாட்டில் தொகையை இழந்தது தொடர்பான் புகார்களும் காவல்துறையில் அதிகம் பதிவாகியுள்ளது. இதுப் போன்ற புகார்களையடுத்து இந்திய மொபைல் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஆன்லைன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கு எதிராக அந்த செயலிகள் செயல்படுவதாலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Share this:

Related posts

நிறுத்தப்பட்டது 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி… பகீர் தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி…!!

THAVAMANI NATARAJAN

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M

கனமழையால் அரங்கேறிய கோர விபத்து… கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்தது என்ன??

THAVAMANI NATARAJAN

கஞ்சா கிடைக்காத கடுப்பில் போதை ஆசாமி செய்த காரியம்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மருத்துவருக்கு காத்திருத்த அதிர்ச்சி…!!

NEWSKADAI

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA