Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

Share this:

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே….
ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம் என்று…
ஆடுவோமே… பள்ளு பாடுவோமே…
ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம் என்று…

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 15 ம் நாள் சுதந்திர நாளாகவும், ஜனவரி 26 ம் நாள் குடியரசு நாளாகவவும் கொண்டாடி வருகிறோம்.


300 வருடங்களுக்கு முன்பு வரை நமது நாட்டை சிறு சிறு மன்னர்கள் ஆண்டு வந்தனர். மக்கள் எவரும் மக்களாட்சி பற்றி சிந்திக்கவில்லை. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று வாழ்ந்து வந்தனர். வியாபாரம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சி புரிந்தனர். புரட்சியாளர்கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்து விடுதலைக்காகப் போராடினார்கள். நேதாஜி இராணுவ புரட்சி நடத்தினார்.

மகாத்மா காந்தியின் தலைமையில் கீழ் அஹிம்சை வழி போராட்டம் நடைப்பெற்றது. இவர்கள் போன்ற தலைவர்களின் போராட்டத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். பன்னெடுங்காலமாக ஆங்கிலேயேர்களிடம் அடிமைப்பட்டிருந்த நம் நாடு, பல தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்கள் தங்கள் உயிர் தியாகத்தாலும், அறப்போராட்டங்கள் மூலமாகவும் ஆங்கிலேயேர்களிடமிருந்து விடுதலைப் பெற்று தந்தனர்.

இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசித்த நாளாகிய 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாளை சுதந்திர நாளாக கொண்டாடி வருகிறோம். சுதந்திரம் பெற்றவுடன் நமக்கென தனி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை. ஆங்கிலேயேர்கள் ஏற்படுத்திய சட்டங்களையே நடைமுறைப்படுத்தி வந்தனர். அதன்பிறகு டாக்டர் அம்பேத்கார் தலைமையில் சட்ட வல்லுனர்கள் கூடி கலந்து ஆலோசித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் ஜனவரி 26 1950 ஆம் ஆண்டு. இந்த நாளைத் தான் நாம் குடியரசு நாளாகக் கொண்டாடி வருகிறோம். சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளாக, கொடியேற்றுவது, இனிப்புகள் வழங்குவது, விடுமுறையைக் கொண்டாடுவது போன்றவை நாம் அறிந்ததே. மேலும் இதில் உள்ள வேறுபாடுகள் சிலவற்றை நாம் அறிந்துக் கொள்வோம்..

சுதந்திரத் தினத்தன்று, மக்களின் தலைவர் இந்திய பிரதமர் கொடியேற்றுவார்.குடியரசு தினத்தன்று, நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசு தலைவர் கொடியேற்றுவார்.
சுதந்திரத் தினத்தன்று, செங்கோட்டையில் கொடி ஏற்றப்படும்.குடியரசு தினத்தன்று, குடியரசு தலைவர் மாளிகை அமைந்துள்ள ராஜ வீதியில் கொடி ஏற்றப்படும்.
சுதந்திரத் தினத்தன்று, நாம் அரும்பாடுபட்டு எவ்விதம் சுதந்திரம் அடைந்தோம் என்பதைப் பற்றியும், அதற்கு காரணமாக அமைந்த தியாகிகளுக்கு நன்றிக் கூறி அவர்களின் தியாகம் நினைவு கூறப்படும்.குடியரசு தினத்தன்று, இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்தும் முப்படைகளின் அணிவகுப்பும், பன்முகக் கலாச்சாரம் மற்றும் சமூக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிவகுப்பும் நடைபெறும்.

Share this:

Related posts

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

THAVAMANI NATARAJAN

செல்போனிலேயே சுலபமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்…!!

NEWSKADAI

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN