Newskadai.com
தமிழ்நாடு

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

Share this:

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் திரளாக வந்து கண்டுகளிப்பர். நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்கள் வேடிக்கை பார்க்க வருபவர்கள் என பெரும் கூட்டம் மெரினா கடற்கரை எங்கும் காணப்படும். இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொரோனா லாக் டவுன் காலத்தில் வருவது நம் கொண்டாட்டத்தை மட்டுப் படுத்துவதாக உள்ளது. எனினும் அரசு சார்பில் வழக்கம் போல் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

இந்நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மாணவர்கள், பொதுமக்கள், மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே இவ்விழாவினை கண்டுகளிக்கும் படி முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கோட்டையில் நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட முன் களப்பணியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

NEWSKADAI

இந்தியாவிலேயே முதன் முறை… எடப்பாடி அதிரடியால் கதிகலங்கும் கொரோனா…!!

THAVAMANI NATARAJAN

சென்னையை அடுத்து கடலூரில் நடந்தேறிய பயங்கரம்…. குட்கா கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல்…!!

THAVAMANI NATARAJAN

நவம்பரில் பள்ளிகள் திறப்பா?…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

THAVAMANI NATARAJAN

ஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்!!…

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI