Newskadai.com
சினிமா

சுஷாந்த் சிங் மரண வழக்கு… அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்…!!

Share this:

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஒரே படத்தில் ஓஹோ என கிடைத்த பிரபலத்தால் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அவர், மன அழுத்தம் காரணமாக  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் வழக்கில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் தொடர்பிருக்கலாம் என பிரச்சனையை கிளப்பிய சுஷாந்த் ரசிகர்கள், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தை தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அதில் சுஷாந்தின் மரணத்திற்கு ரியா தான் காரணம் என்றும், அவருடைய வங்கி கணக்கில் இருந்து 150 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஒருபக்கம் மும்பை வந்த பீகார் போலீசாருக்கு மும்பை போலீசார் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், விசாரணை ஆவணங்களை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Sushant

மேலும் படிக்க: http://எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

இந்த சமயத்தில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது மகனின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார். பீகார் அரசின் பரிந்துரைக்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து சுஷாந்த் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கை மாறியது.

மேலும் படிக்க: http://கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரியா, பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மும்பையில் விசாரிக்கும் படி கோரியிருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆவணங்களையும், சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

இதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை?…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…!!

NEWSKADAI

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

“மனிதாபிமானமற்றவர்களாகி விட்டோம்”… நடிகர் மாதவன் சாடல்…!!

NEWSKADAI

‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

AMARA

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA