Newskadai.com
தமிழ்நாடு

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

Share this:

காவிரியில் தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளதா? என்பதை அறிய மத்திய நீர்வளத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை இந்தியில் பதில் அளித்து இருக்கிறது. இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஹிந்தி கல்வி மொழியோ அல்லது அரசின் அலுவல்மொழியோ கிடையாது. ஆங்கிலமும் தமிழுமே தமிழக அரசின் அலுவல்மொழி.

1963 இல் இயற்றப்பட்ட மத்திய அரசின் அலுவல் மொழி சட்டத்தின்படி மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி நான் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு முழுக்க முழுக்க ஹிந்தி மொழியில் பதில் தருவது சட்டவிரோதம். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று அறிந்து கொள்ளவும் நடப்பாண்டு சாகுபடிக்கு ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளதா என தெரிந்து கொள்ளவும் மத்திய அரசின் நீர்வளத்துறைக்கு ஜூலை 16ஆம் தேதி 8 வினாக்கள் கொண்ட கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தேன். அதற்கு மத்திய நீர்வளத்துறையிடம் இருந்து வந்த பதில் கடிதங்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் மட்டுமே உள்ளன. தமிழக மக்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கேட்ட கேள்விகளுக்கு ஹிந்தி மொழியில் மத்திய அரசு தகவல் தந்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

எங்க ஜாதி பெயரை கெடுக்கிறீங்களா?… ராஜகோபாலன் தப்ப செய்யலைன்னு நிரூபிக்கப்பட்டால்… சவால் விடும் மதுவந்தி…!

AMARA

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… அரசுக்கு அதிரடி கோரிக்கையுடன் வழக்கு

AMARA