Newskadai.com
இந்தியா

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

Share this:

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை நீடித்து வருகிறது. இருப்பினும் திரைத் துறையினர் ஒரு சில இடங்களில் தங்களது படிப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திராவில் அதிலாபாத் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் படப்பிடிப்பு பகுதிக்கு அருகில் இருந்த கண்டலா அருவிக்கு தனது நண்பர்களுடன் அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கே கூடியதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அல்லு அர்ஜுனுடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் கூடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனால் விமர்சனங்களும் எழுந்தது. 

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் தடையை மீறி அருவி பகுதிக்கு சென்றதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளனர்.


Share this:

Related posts

ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்த மத்திய அரசு… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

POONKUZHALI

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

டிஸ்லைக்குகளை குவிக்கும் பிரதமரின் வீடியோக்கள்… அழுகுனி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக…!!

MANIMARAN M

இனி இந்த சான்றிதழ்களைப் பெற ‘ஆதார்’ கட்டாயம் இல்லை… வெளியானது அதிரடி அறிவிப்பு..!

THAVAMANI NATARAJAN

நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இன்று யு.பி.எஸ்.சி தேர்வுகள்…

MANIMARAN M

“ஒருபோதும் மொழி திணிப்பு கிடையாது” : மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!

MANIMARAN M