Newskadai.com
சினிமா

கொடைக்கானலில் கும்மாளம்… நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்குப்பதிவு…!

Share this:

லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் ஜாலியாக வெளியில் சுற்றுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சொகுசு காரில் சென்ற புகைப்படம் வைரலானது. இதையடுத்து ரஜினி முறையாக இ-பாஸ் வாங்கிய பிறகே செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றாரா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து ரஜினிகாந்த் முறையாக அனுமதி பெற்றதாக வெளியான இ-பாஸில் தேதி மற்றும் காரணங்கள் முரணகாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்குள் நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன்பிடித்ததாக புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறு வைரலாகின. இதுகுறித்து மகேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் அனுமதியின்றி பேரிஜம் ஏரி பகுதியில் நுழைந்ததும், வனத்துறையினர் அவர்களை எச்சரித்து தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகர்களை உரிய அனுமதியில்லாமல் அப்பகுதிக்குள் அனுமதித்ததாக வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பேரிஜம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது பேரிடர் மேலாண்மை, தொற்று நோய் தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனும், கோட்டாட்சியர் சிவக்குமாரும் பரிந்துரைத்திருந்தனர். அதன்படி இன்று நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share this:

Related posts

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

AMARA

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

AMARA

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI