Newskadai.com
தமிழ்நாடு

மரணத்தில் முடிந்த “பர்த்டே” பார்ட்டி… மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

Share this:

கோவையில், வடவள்ளியைச் சேர்ந்த மோகன் ஹரி(23), வடகோவையைச் சேர்ந்த பிரஜேஷ்(23), மணிகண்டன்(22), பூமார்கெட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(22), சீர நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இந்தரேஷ்(22), ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். தங்கள் நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு நேற்று அதிகாலை ஆனைக்கட்டி சாலையில் கோவைக்கு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை இந்தரேஷ் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். தடாகம் காளையனூர் பகுதியில் வந்துக் கொண்டிருந்தபொழுது கார் கட்டுபாட்டை இழந்து எதிரில் இருந்த சாலையோர மரத்தில் மோதியது. இதில், இந்தரேஷ், கார்த்திக் ராஜா, மோகன் ஹரி, மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த தடாகம் காவல் அதிகாரிகள் நால்வரின் சடலங்களையும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த பிரஜேஷை கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். இவ்விபத்து குறித்து தடாகம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தரேஷ், பிரஜேஷ் அகிய இருவரும் கல்லூரி மாணவர்கள் என்றும், கார்த்திக் ராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் என்றும், மோகன் ஹரி துணி கடையில் பணியாற்றி வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Share this:

Related posts

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை… தலைமறைவான முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வை அலேக்காக தூக்கிய போலீஸ்…!

NEWSKADAI

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA