Newskadai.com
தமிழ்நாடு

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

Share this:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காடவராயன் பட்டி என்ற இடத்தின் அருகே தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தேவதாசன் என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தேவதாசன் மீது சற்றும் எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் தேவதாசன் காரின் முன்பக்க பம்பரில் மாட்டிக்கொண்டார்.

அந்த இளைஞர் பம்பரில் மாட்டிக் கொண்டது தெரியாமல் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் புதுக்கோட்டை நோக்கி சென்றுள்ளார். காரில் சிக்கிய இளைஞரின் உடல் ரோடெல்லாம் தேய்ந்து கொண்டே சென்றது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தர்வகோட்டை சுங்கச்சாவடியை அந்த கார் கடந்த பொழுது உயிரிழந்த நிலையில் தேவதாசனின் உடல் சாலையில் விழுந்துள்ளது. கார் ஓட்டி வந்த மனித மிருகம் இதைப் பார்த்ததும் காருடன் தப்பிச் சென்று விட்டான்.


தேவதாசனின் நைந்து போன உடலைப் பார்த்த பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்து போகச் செய்தனர். மேலும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க 30க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் நைந்து போன சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து காரை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Share this:

Related posts

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!!

THAVAMANI NATARAJAN