Newskadai.com
தமிழ்நாடு

நாளை புரட்டாசி அமாவாசை… மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

Mecheri
Share this:

வ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையை நம் முன்னோர்கள் சிறப்பாக வழிபாடு நடத்துவது வழக்கம். அமாவசை தினத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் கூடுவதற்கு மத்திய மாநில அரசுகள் தடை விதித்துவருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் உள்ள மேச்சேரியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் திருகோவில் அமைந்துள்ளது, இங்கு ஒவ்வொரு அமாவசையை அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம், அதிலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையை அன்று வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு நாளை வருகின்ற புரட்டாசி அமாவாசையை அன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களிடம் சமூக இடைவெளியை ஏற்படுத்துவது கிருமிநாசினி தெளிப்பது, முக கவசம், போன்ற கட்டுபாடுகளை கடைபிடிப்பதில் சிரமம் இருக்கும் என்பதால் நேற்று மேட்டூர் உதவி ஆட்சியர், மேட்டூர் தாசில்தார், இந்து அறநிலைத்துறை  உதவி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Mecheri

இந்த ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி நாளை நடக்க உள்ள புரட்டாசி அமாவசையை அன்று பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதே போல் பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

MANIMARAN M

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

MANIMARAN M

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

ஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!

NEWSKADAI

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI