Newskadai.com
இந்தியா

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

Share this:

மத்திய அரசும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து அவர்களது கொள்கைகளை கருத்துக்களை மக்களுடைய கருத்தாக மாற்றி பேசி வருவதும் நீதிமன்றங்கள் அதற்கு குட்டு வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. எத்தனைதான் நீதிமன்றங்கள் கண்டனக் குரல் எழுப்பினாலும் மத்திய அரசு மக்கள் விரோத போக்குகளை கைவிடுவதாக இல்லை.

புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கை 2020, புதிய கல்விக் கொள்கை, மேக் இன் இந்தியா, விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்தல், இந்தி மொழி திணிப்பு, அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 22 மொழிகளுக்கும் அங்கீகாரம் அளித்தல் உட்பட பல விஷயங்களில் நீதிமன்றங்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கணைகளை தொடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு நீதிமன்ற கண்டனங்களை கண்டுகொள்ளாமல் அது செயல்படுத்திய விரும்பியதை செயல்படுத்திக் கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் இப்போது NEET, JEE தேர்வுகள் இடம்பெற்றிருக்கின்றது. கொரோனா (covid-19) தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் பல மாதங்களாக மூடி கிடக்கிறது. தேர்வுகள் நடத்த முடியாத சூழலால் மாநில அரசுகள் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு நீட் ஜேஇஇ தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கு பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது மத்திய அரசு.

90% மாணவர்கள் நீட் தேர்வு நடைபெறுவதை விரும்புகிறார்கள் என்று மத்திய அமைச்சர் வழக்கம்போல தனது கருத்தை மாணவர்கள் கருத்தாக அள்ளி விடுகிறார். இது எவ்வளவு பெரிய பொய் என்பதை ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த்சோரன் நிரூபித்துள்ளார். அவர் ஜார்கண்ட் மாநில மாணவர்களிடம் NEET, JEE தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தினார். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மாணவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். 70% மாணவர்கள் NEET, JEE தேர்வுகள் ஒத்தி வைப்பதற்கு ஆதரவளித்துள்ளனர்.

மாணவர்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை ஹேமந்த்சோரன் ஆதார பூர்வமாக நிரூபித்து விட்டார். இந்த விஷயத்தில் பாஜக ஆளாத 7 மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட உள்ளனர்.


Share this:

Related posts

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

MANIMARAN M

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

கேரளாவில் கடும் நிலச்சரிவு… 80 பேர் மண்ணில் புதைத்திருக்கலாம் என அச்சம்…!!

AMARA

“கருத்து சுதந்திரத்தை நசுக்கவே தேச துரோக வழக்கு பயன்படுகிறது”… மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி…!

MANIMARAN M

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI