Newskadai.com
இந்தியா

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

Share this:

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுதும் பல நாடுகள் திக்குமுக்காடி வரும் சூழலில், பல்வேறு கட்டுபாடுகள், பல கட்ட முடக்கங்கள் என கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிக பாதிப்புக்குள்ளான இந்தியா கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பொது மக்கள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் சில கட்டுபாடுகளுடன் அனைத்து வணிக நிலையங்களும் இயங்க அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கொரோனா தொற்று பணம் மற்றும் நாணயங்கள் மூலம் பரவுமா என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டு வருகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அந்த கோரிக்கையில் பணம் மற்றும் நாணயங்கள் ஒருவரிடமிருந்து அறியபடாத சங்கிலி தொடராக பலரிடம் சென்று சேர்கிறது. பணம் மற்றும் நாணயங்களில் நோய் கிருமிகள் எளிதில் தொற்றக் கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. மேலும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில் பணம் மற்றும் நாணயங்கள் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்டுள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் எச்சில் மூலம் பரவுவதால், பணம் மற்று நாணயங்கள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்று CAIT தெரிவித்துள்ளது. எனவே இது குறித்தான சரியான விளக்கத்தையும், இதிலிருந்து மேற்கொள்ளவேண்டிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் வர்த்தகர்களுக்கும் பொது மக்களுக்கும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பி.சி.பார்டியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் காண்டேல்வால் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this:

Related posts

கொடுந்தீக்கு பலியான கொரோனா நோயாளிகள்… ஆந்தராவில் நடந்த பகீர் சம்பவ வீடியோ

MANIMARAN M

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு… கொரோனாவை கண்டுகொள்ளாமல் தொடங்கியது JEE தேர்வு…!!

THAVAMANI NATARAJAN

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI

இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்..!!!

MANIMARAN M