Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கொரோனாவால்… பள்ளி ஹெட் மாஸ்டர், ’டீ மாஸ்டராக’ மாறிய பரிதாபம்..!!

tea
Share this:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த செல்வி(32) என்பவர் இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம் மற்றும் பிஎட் படிப்பை முடித்த இவர் பல பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். திருமணத்திற்கு பிறகு கணவர் சிவா நடத்திவரும் மழலையர் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார், கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது அனைவரும் அறிந்ததே.

tea தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் கொரோனா காலங்களின் மக்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு பள்ளி கட்டணத்தை கேட்கவும் முடியாத சூழல்.

இந்நிலையில் தனியார் பள்ளி முதல்வர் செல்வி வண்ணாத்திக்குட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள தனது மாமனார் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் சாதாரணமாக டீ, காபி மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது ’என்னை போன்று படித்த ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியார்கள் வருவாய் இழந்து தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு அரசு நிவாரண நிதியுதவிகள் வழங்கிட வேண்டும், எவ்வளவு படித்திருந்தாலும் சுயத்தொழில் செய்து தன் தேவையை பூர்த்தி செய்யும் சுகமே தனி’ என்கிறார்.


Share this:

Related posts

இனி பேங்க் உங்க வீட்டு வாசலுக்கே வரும்… “எஸ்.பி.ஐ” அறிவித்துள்ள அசத்தலான சேவைகள்…!

AMARA

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

NEWSKADAI

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

வெற்றி மேல் வெற்றி வரும் நல்ல நாள்… வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது…

THAVAMANI NATARAJAN