திருவாரூரில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சொந்த தம்பியின் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் மென்பொருள் பொறியாளர்களாக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி, சொர்ணப்பிரியா தம்பதியினர், ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊரான திருவாரூருக்கு வந்துள்ளனர். இவரது வீட்டில் அண்ணன் தம்பதியர் உட்பட அணைவரும ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வந்த சுந்தரமூர்த்தி, அண்ணன் ராஜகோபாலன் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு சுந்தரமூர்தியிடம் பணம் கேட்டுள்ளார்.
எனவே அண்ணனக்கு ரூ.15 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கொடுத்த பணத்துக்கு பதிலாக பள்ளி நிர்வாகத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என தம்பி மனைவி கேட்டுள்ளார். அண்ணன் ராஜபோலன் இதனை மறுத்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நமது குடும்பத்தில பிரச்சனை வர தம்பி மனைவி தான் காரணம் என கருதிய ராஜாகோபால் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:http://கள்ளத்தனமாக மது விற்றவர்களை தட்டிகேட்ட போலீசார்…பலி தீர்த்த கும்பல்…!