Newskadai.com
விளையாட்டு

விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…!

Share this:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் தற்போது அடுத்தடுத்து விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. அதில் பங்கேற்பதற்காக வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 51 பேர் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் துபாய் சென்றது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வேக பந்து வீச்சாளரான தீபக் சாஹர், பேட்ஸ் மேன் ருதுராஜ் ஜெய்க்வாட் உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் பிறந்த நாள் கொண்டாடிய மின்னல் வீரர் உசேன் போல்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திரையுலகில் காட்டு காட்டி வந்த கொரோனா இப்போது விளையாட்டு துறைக்குள் புகுந்துள்ளது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது பிரபல கால்பந்தாட்ட வீரரான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் நட்சத்திர கால் பந்தாட்ட வீரர் நெய்மர், பி.எஸ்.ஜி. எனப்படும் செயிண்ட் – ஜெர்மைன் எனும் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நெய்மருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு, சினிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெய்மர் நல்ல படியாக குணமடைய வேண்டுமென அவருடைய ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Share this:

Related posts

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் நெம்பர் ஒன் கேப்டன்… தல தோனியை பின்னுக்குத் தள்ளிய இயன் மோர்கன்…!!

MANIMARAN M

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI