Newskadai.com
தமிழ்நாடு வீடியோ

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

Share this:

உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள போராடி வருகின்றனர். தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்துவருகிறது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அரசாங்கம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஊரடங்கின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் படிப்பு நம்மால் பாதிக்கக்கூடாது என்பதற்காக தங்களுக்கு வருமானத்தை அளிக்கும் பசு மாட்டை கூட விற்று ஸ்மாட் போன் வாங்கி தந்த செய்திகளை நாம்  பார்த்தோம். மேலும் தனது படிப்பிற்கு ஸ்மார்ட் போன் இல்லையே என்ற வருத்ததில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி அதிர்ச்சி கொடுத்தது.

Pubg

 இப்படிப்பட்ட சூழலில் பப்ஜி விளையாட போன் வாங்கி தரவில்லை என்று பள்ளி மாணவன் தினேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் தினேஷ்குமார் என்ற பள்ளி மாணவன் மிட்டூர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த மாணவர், நண்பர்கள் தினமும் பப்ஜி விளையாடுவதை கண்டு வந்துள்ளார்.

தானும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாட வேண்டும் என்ற ஆசையில்,  தனது பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் வாங்கி தரவேண்டும் என அடம்பிடித்துள்ளான். விவசாய கூலித் தொழிலாளியான பெற்றோர்களால் செல்போன் வாங்கி தரமுடியாத நிலையில் இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை பள்ளிக்கு சென்று வாங்கி வந்து கொண்டிருக்கையில் தனது சக நண்பர்கள் பப்ஜி விளையாடி கொண்டிருந்ததை பார்த்துள்ளான். தான் விளையாட ஆசைப்பட்டு நண்பர்களிடம் போன் கேட்டுள்ளான். ஆனால் யாரும் அவனுக்கு போன் தராததை தொடர்ந்து ஏக்கத்தில் வீடு திரும்பியுள்ளான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்டுத்திக்கொண்டு தனது அம்மாவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். சிறுவன் பப்ஜி கேம் விளையாட முடியாத ஏக்கத்தில் தான் இறந்தானா? இல்லை வேறு காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Share this:

Related posts

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

சினிமா பாணியில் சிலை கடத்தல்… இணைய பேரத்தில் சிக்கிய கொள்ளை கும்பல்…

MANIMARAN M

மக்களே இனி புகார் மனுவை தூக்கிட்டு அலைய வேண்டாம்… உட்கார்ந்த இடத்தில் இருந்தே தீர்வை பெற முதல்வரின் புதிய திட்டம்…!!

AMARA

செல்ஃபி எடுத்தப் பெண்ணை கட்டியணைத்து முத்தமிடும் கரடி… சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ

NEWSKADAI

சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி… வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்…!!

THAVAMANI NATARAJAN

ஏழை மாணவியின் ஐ.ஏ.எஸ்.கனவு… வீடு தேடி போய் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

THAVAMANI NATARAJAN