Newskadai.com
அரசியல்

ஒரே ஒரு போன்கால்…. அலறியடித்துக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்…!

Bomb threats to Vijayakanth
Share this:

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டிலும், ஜூலை 4ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள தளபதி விஜய் வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு போன் கால் வந்தது. இதையடுத்து மேப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் முழு வீட்டையும் சோதனையிட்ட போலீசார், வெடிகுண்டு இருப்பதாக வந்த போன் வெறும் புரளி என்பதை உறுதிபடுத்தினர்.

Bomb threats to Vijayakanth

மேலும் படிக்க: http://முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்..

இதையடுத்து ஜூலை 19ம் தேதி தல அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அங்கும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடிகர் சூர்யாவின் பழைய தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் புரளி என்பது தெரியவந்தது. இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்ததாக நடைபெற்ற விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிக்கியதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.

Bomb threats to Vijayakanth

 

மேலும் படிக்க: http://கணவரால் கட்டாயப்படுத்தப்பட்ட குஷ்பு… முதல் நாளே பாஜக கூடாரத்தில் அரங்கேறிய அவமானம்…!

தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவசர, அவசரமாக புறப்பட்டுச் சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கு எதுவும் கிடைக்காததால், மர்ம நபர் யாரோ வேண்டுமென்றே வதந்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் திறப்பு எப்போது?… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: செப்.21ல் தோழமை கட்சிகளுடன் திமுக ஆலோசனை…!!

MANIMARAN M

மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சமூக விரோதிகள்…!

AMARA

#BREAKING மத்திய அமைச்சர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய மோடி, அமித் ஷா…!

AMARA

“திமுக நடவடிக்கையை எதிர்கொள்ள தயார்”… மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்ட எம்.எல்.ஏ., கு.க.செல்வம்…!!

NEWSKADAI

#BREAKING கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு வழக்கில் அதிரடி… காதல் மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை…!

NEWSKADAI