Newskadai.com
சினிமா

விஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யா… போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..!!

surya
Share this:

தமிழகத்தில் சினிமா பாணியில் கொலை செய்வது, வெடிகுண்டு வைப்பது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் மர்ம நபர் தொலைப்பேசியில் திரைப்பட நடிகர் சூர்யாவின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

நீட் விவகாரத்தில் சூர்யாவின் அறிக்கையை தொடர்ந்து பல்வேறான விமர்சனங்கள் வரும் நிலையில், தொலைபேசியில் இவ்வாறான தகவலை கேட்ட பேலீசார் அதிச்சியடைந்தனர் இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆழ்வார்ப்பேட்டை சீத்தாமம்மாள் காலனி 2வது தெருவில் இருந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு சென்றனர்.

suriya

சூர்யா அலுவலகத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே அடையாருக்கு மாற்றியது தெரியவந்தது. இருப்பினும் போலீசார், மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தை சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை. வெறும் வதந்தியே என தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட புவனேஷை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தினர். அதில் ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் நாராயனசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய், அஜித் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

AMARA

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

குழந்தை பிறந்தநாளுக்கு நீங்க போடுற டிரஸா இது?… மோசமான உடையை பார்த்து முகம் சுளிக்கும் எமி ரசிகர்கள்…!!

THAVAMANI NATARAJAN