Newskadai.com
தமிழ்நாடு

சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை.. பயணிகள் அதிர்ச்சி..!!

Share this:

கொரோனா பெரும் முடக்கத்துக்கு பிறகு படிப்படியாக மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. ரயில் போக்குவரத்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். நேற்று கோவை இண்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்ய ஏரளாமான பயணிகள் சேலம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள்.

திடீரென சேலம் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பாபு தலைமையிலான போலீசார் அங்கிருந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்துள்ளனர். ரயில் நிலையம் முன்புறமுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம், பார்சல் அனுப்பும் அலுவலகம் மற்றும் ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்துள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில் இருந்து கூறியதாவது, பெங்களூரில் கடந்த 2002 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று தீவிரவாதி ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். எனவே அந்த நாளில் தீவிரவாதிகளால் அசம்பாவித சம்பங்கள் நடந்துவிட கூடாது என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்கள். போலீசாரால் நடத்தப்பட்ட இந்த சோதனையால் பயணிகளிடையே ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

அதிரடி சரவெடி: 40 சதவீத பாடங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்…!!

MANIMARAN M

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

MANIMARAN M

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

“வாயில வடை சுடாதீங்க… எங்க வயிர நெறைக்காது…!!” தூய்மைப் பணியாளர்களின் கண்ணீர் போராட்டம்…!!!

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M