Newskadai.com
சினிமா

நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசாரிடம் போக்கு காட்டும் மர்ம நபருக்கு வலை வீச்சு…!

I missed true love so much,Dhanush
Share this:

கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறினார், இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அது வெறும் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலி மிரட்டல் குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் கடலூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மிரட்டல் விடுத்ததையும் கண்டுபிடித்தனர்.

Bomb threats to Vijayakanth

மேலும் படிக்க: http://பரமபதமாடும் தங்கம் விலை… ஒரே நாளில் இவ்வளவு குறைவா..!?

அதையடுத்து தளபதி விஜய், தல அஜித் மற்றும் நடிகர் சூர்யாவின் பழைய தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மோப்ப நாயுடன் சோதனையில் இறங்கிய போலீசார் அங்கிருந்து எவ்வித வெடிபொருட்களையும் கண்டறியவில்லை. அதுவும் வெறும் வதந்தி என்பது உறுதியானது. இந்த வழக்கிலும் மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனே குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.

Bomb threats to Vijayakanth

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவசர, அவசரமாக புறப்பட்டுச் சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கு எதுவும் கிடைக்காததால், மர்ம நபர் யாரோ வேண்டுமென்றே வதந்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: http://கணவரால் கட்டாயப்படுத்தப்பட்ட குஷ்பு… முதல் நாளே பாஜக கூடாரத்தில் அரங்கேறிய அவமானம்…!

இந்த பதற்றம் தணிவதற்குள் சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் இந்த போனையும் செய்துள்ளதை சைபர் கிரைம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.


Share this:

Related posts

“ஹிந்தி தெரியாது போடா”… கெத்தாக எதிர்ப்புகாட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள்..!!

MANIMARAN M

சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு…!!

AMARA

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

AMARA

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்…” “ஹிந்தி தெரியாது போடா”

MANIMARAN M

இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவாய்… 800 பட விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை…!

NEWSKADAI