Newskadai.com
சினிமா

”சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, கொலையே ” பாலிவுட்டை கதிகலங்க வைத்த சுப்பிரமணியசுவாமி

Share this:

அரசியலில் அவ்வப்பொழுது சரவெடிகளை கொளுத்திப் போடும் சுப்பிரமணிய சுவாமி இந்த முறை ஒரே ட்விட்டில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் கதிகலங்க செய்திருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி டோனி திரைப்பட புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்த மும்பை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி , ஆதித்ய சோப்ரா, கரன் ஜோகர், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபர்த்தி உட்பட பலரையும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க:http://மாயமான பல்லாயிரம் கோடி ரூபாய். காபி டே சித்தார்த்தா மர்ம மரணத்தில் வெளிவராத புதிய தகவல்கள்..

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்றும், இது தொடர்பாக, தான் ஜூலை 15ஆம் தேதியே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ள தகவலால் பாலிவுட் திரை உலகம் பீதியில் இருக்கிறது. மேலும் இது “தற்கொலை” அல்ல என்று, தான் நம்புவதற்கான காரணங்களையும் தனது ட்விட்டர் பதிவில் பட்டியலிட்டுள்ளார்

மேலும் படிக்க:http://சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

  • சுஷாந்த் மேலாளரின் தற்கொலை
  • வீட்டு பணியாளரின் முன் பின்னான வாக்குமூலங்கள்
  • சிசிடிவியில் பதிவாகி இருக்கும் காட்சிகள்
  • சுஷாந்த் சிங் உடலிலுள்ள காயங்கள்
  • உடல் கிடந்த அறையின் இரண்டு சாவிகளில் ஒன்று காணாமல் போயிருப்பது.
  • சிம்கார்டு மாறியிருப்பது
  • தற்கொலை செய்ய பயன்படுத்தியதாக அடையாளம் காட்டப்பட்ட துணிக்கும் கழுத்தில் உள்ள தழும்புக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பது.

சுப்ரமணியசாமி தெரிவித்துள்ள விஷயங்களை, அவரது அரசியல் அறிக்கைகளை போல் எளிதில் கடந்து விட கூடாது. அவரது வாதத்தை முற்றிலும் மறுப்பதற்கில்லை. இதுவரை அமைதியாக இருந்த சுஷாந்த் சிங் குடும்பத்தார்.

திடீரென்று அவரது தோழி ரியா சக்கரபர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் அளித்துள்ள புகார், சுப்பிரமணிய சாமியின் கருத்திற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் விலகி உண்மை வெளிப்படும் என்று அவர் குடும்பத்தினரோடு நாமும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.


Share this:

Related posts

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகை அடுத்தடுத்து தாக்கும் அதிர்ச்சி

THAVAMANI NATARAJAN

இசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா?…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…!!

NEWSKADAI

கருத்து சொல்ல மட்டுமல்ல… சொல்லால் விமர்சித்தவர்களை செயலால் திருப்பி அடித்த ஜோதிகா…!

AMARA

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

திரும்பி வருவாரா எஸ்.பி.பி?… கண்ணீர் மல்க பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா…!

NEWSKADAI