Newskadai.com
தமிழ்நாடு

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

Share this:

நெய்வேலியைச் சேர்ந்த ஓவியாவிற்கு மூன்றரை வயது இருந்தபோது கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற பெற்றோருக்கு, இடியாய் ஒரு செய்தியை சொன்னார் கண் மருத்துவர். ஓவியாவின் விழித்திரையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் என்பதுதான் அது. ஓவியாவின் பெற்றோர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் உடைந்து போனாலும் ஓவியாவின் படிப்பு தொடர மனம் தளராமல் மாற்று வழிகளை யோசித்தனர்.

மகளின் கற்கும் முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்துள்ளனர். ஓவியாவிற்கு மடிக்கணினியில் தட்டச்சு செய்ய கற்றுக்கொடுத்தார்கள். பின்பு “ஸ்கிரீன் ரீடர்” எனப்படும் மென்பொருளை மடிக்கணினியுடன் இணைத்தனர். ஸ்கிரீன் ரீடர் மென்பொருள் திரையில் தெரியும் அனைத்தையும் ஒலி (sound) வடிவில் வாசிக்கும். அதைக்கேட்டு பாடங்களை படித்து வந்தார். ஓவியா ஏழாம் வகுப்பு படிக்கும்போது கண் பார்வை முழுவதுமாக பறிபோய்விட்டது. ஆனால் பள்ளிப்படிப்பு எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்தது.

இவ்வாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு பெரும் சோதனையாக அமைந்தது. உதவியாளர் இல்லாத நிலையில் தேர்வு எழுதுவது கேள்விக்குறியானது.அதன் பிறகு CBSC அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஆசிரியர் ஒருவர் கேள்விகளை வாசிக்க அதற்கான பதிலை தனது மடிக்கணினியில் தட்டச்சு செய்தார். இவ்விதம் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்தார். இத்தகைய சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதிய மாணவராக மாநிலத்தில் முதலாவது நபராகவும் இந்திய அளவில் இரண்டாவது மாணவராகவும் உள்ளார்.

பெற்றோரின் விடாமுயற்சியும் உந்துதலும் ஊக்குவிப்பும் வீண் போகவில்லை உதவியாளர் இல்லாமல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஓவியா 447 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பார்வைத்திறன் குறைபாடு உடைய அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படிக்க முடியும் என்று கூறும் ஓவியாவின் கனவு கலெக்டர் ஆவது. கலெக்டர் ஆகி மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது தான் தனது லட்சியம் என்று கூறுகிறார். ஓவியாவின் லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.


Share this:

Related posts

கரையை நெருங்கும் யாஸ் – 2 மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட்

MANIMARAN M

#BREAKING விரைவில் தொடங்குங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு…!

AMARA

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

நீதிபதிக்கே இந்த நிலைமையா..?? கொதித்தெழுந்த மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI