Newskadai.com
அரசியல்

அடுத்த முதல்வர் யாரென்று?… நாங்கதான் முடிவு செய்வோம்…

Share this:

சென்னை கமலாலயத்தில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை மாநில தலைவர் எல்.முருகன் தலைமையேற்று காணொளி காட்சி மூலம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய எல். முருகன் “இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கைக் காட்டுபவரே முதல்வர்”… என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த வாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, தமிழகத்தில் திமுக-அதிமுக என்ற நிலை மாறி, திமுக vs பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார். துணைத்தலைவர் வி.பி.துரைசாமியுடைய கருத்தை இதுவரை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மறுக்கவில்லை.

 

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவில் கட்சியினரிடையே அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் சர்ச்சை எழுந்தது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுக் கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், பாஜக தலைவர் எல்.முருகனுடைய பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மேலும் அவர் கூட்டத்தில் பேசியதாவது, 2021-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்று கணிசமான எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்குள் இருப்பார்கள். பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே தொடருகிறது, 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.


Share this:

Related posts

“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…!!

AMARA

“ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்”… தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அறிக்கை…!

AMARA

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

AMARA

கை விரித்த பாஜக… மீண்டும் திமுகவிற்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ…!

NEWSKADAI

ஊரடங்கு நீட்டிப்பு… உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

NEWSKADAI