Newskadai.com
அரசியல் சினிமா

விஜய் சேதுபதிக்கு வலை விரிக்கும் பாஜக… வரித்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் குஷ்பு, அண்ணாமலை… பின்னணி என்ன?

vijay sethupathi try BJP
Share this:

தேர்தல் யுக்தியைப் பொறுத்தவரை மற்ற கட்சிகள் களப்பணியையும், பிரச்சாரத்தையும் மட்டுமே நம்பியிருக்கும். ஆனால் பாஜக மட்டுமே கவர்ச்சி விளம்பரங்களை காட்டி மக்களை மயக்க திட்டமிட்டது. அதன்படி நடக்க உள்ள 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கும் அதே கவர்ச்சி டெக்னிக்கை பாஜக கையில் எடுத்துள்ளது. அதற்காக தான் சோசியல் மீடியாவில் மக்களுக்கிடையே பிரபலமானவர்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோரை வலை வீசி பிடித்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் பாஜகவின் வலையில் சிக்கியவர்கள் தான் கர்நாடகாவின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையும், நடிகை குஷ்புவும். இவர்கள் இருவரை வைத்து பாஜக மிகப்பெரிய பிரச்சார திட்டத்தை போட்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏன் வர உள்ள தேர்தலில் குஷ்பு, அண்ணாமலைக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

annamalai Bjp

நிலைமை இப்படி போய்க் கொண்டிருக்க தற்போது தீயாய் கொளுந்துவிட்டு எரியும் நடிகர் விஜய் சேதுபதி விவகாரத்தில் பாஜக தலையிட ஆரம்பித்துள்ளது. இலங்கை தமிழராக இருந்தாலும் சிங்களர்களின் அடிவருடியாக செயல்பட்ட முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அதுதொடர்பான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போலவே விஜய் சேதுபதி இருந்தது தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

800 Movie first Look

இதனால் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி , நாம் தமிழர் கட்சி சீமான், பாடலாசிரியர் தாமரை, இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கெளதமன், சீனு ராமிசாமி என பலரும் இப்படிப்பட்ட படத்தில் நடிக்க வேண்டாமென விஜய் சேதுபதிய வலியுறுத்தி வருகின்றனர். இனதுரோகியின் முகமாக உங்கள் முகம் மாற வேண்டாம் என கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் இந்த சமயத்தில் பாஜகவைச் சேர்ந்த குஷ்புவும், அண்ணாமலையும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். “விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதில் எந்த வித தவறும் இல்லை என்றும் ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க அனைத்து உரிமையும் உண்டு என்றும் விஜய் சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் இதில் அரசியல் கலப்பது சரியல்ல” என்றும் அண்ணாமலையும், சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள்… விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பதில் என்ன தவறு இருக்கு என குஷ்புவும் வரிந்து கட்டிக்கொண்டு சப்போர்ட் செய்துள்ளனர்.

kushboo joint bjp

இதை எல்லாம் பார்க்கும் போது விஜய் சேதுபதிக்கு பாஜக வலை விரிக்கிறதோ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்னதான் இருந்தாலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில், அபிஷேகம் செய்வதை கட்டும் போது, உடை மாற்றுவதை காட்டக்கூடாத என விஜய் சேதுபதி சொன்ன குட்டிக்கதையை, பல மாதங்கள் கழித்து தூசு தட்டி எடுத்த பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் அவரை வச்சி செஞ்சத மனுஷர் மறந்திருப்பாரா என்ன?. ஒட்டுமொத்த குடும்பத்தையும் பச்சை பச்சையாக சோசியல் மீடியாவில் கிழித்ததும், ஊர் முழுக்க புகார் கொடுத்து அலைய வச்சதும் விஜய் சேதுபதி கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா?.


Share this:

Related posts

இதோ… வெளியானது பிக்பாஸ் சீசன் 4 2nd புரோமோ.. இந்த முறை பேசியிருக்குறது கமல் இல்ல…!!

AMARA

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

#BREAKING கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்…. தீராத சோகத்தில் டிடிவி தினகரன்….!

AMARA

ஆசிர்வாதம் கிடைத்தது… அற்புதம் நடந்தது… ரஜினி குரலைக் கேட்டு புத்துயிர் பெற்ற ரசிகர்…!

THAVAMANI NATARAJAN

“I am a Tamil பேசும் இந்தியன்”… மகனுடன் சேர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்…!!

NEWSKADAI

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

NEWSKADAI