Newskadai.com
அரசியல்

குமரியை கைப்பற்ற துடிக்கும் பொன்னார்… “டார்கெட் கன்னியாகுமரி” வியூகம் வகுக்கும் பாஜக…

Share this:

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டும் செல்வாக்கோடு இருக்கும் தமிழக மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி. பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் இதுவரை எட்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். அதில் இரு முறை வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் இதே தொகுதியில் போட்டியிட்டார்.

காங்கிரஸ் வசந்த்&கோ வசந்தகுமாரை களம் இறக்கியது. இதில் வசந்தகுமாரிடம் பொன் ராதாகிருஷ்ணன் தோற்றுப்போனார். இந்நிலையில் வெற்றி பெற்ற வசந்தகுமார் எம்.பி திடீரென உடல்நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக காலமாகியுள்ளதால், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுக்கு தமிழகத்தில் முகவரியை தேடி தந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் பாஜகவும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரசும் முனைப்பு காட்டுகின்றன.

வசந்தகுமார் எம்.பியின் மரணத்தின் மூலம் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அதிர்ஷ்டம் அடித்து இருப்பதாகவே பாஜகவினர் கருதுகின்றனர். பாஜகவை பொருத்தவரை 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு எம்பி, எம்.எல்.ஏ, சீட் கொடுப்பதை விரும்புவதில்லை. பொன். ராதாகிருஷ்ணனுக்கு தற்போது 68 வயதாகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு வயது 73 ஆகிவிடும் என்பதால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது வசந்தகுமார் எம்.பியின் திடீர் மரணம் பொன்னாருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. பொன். ராதா கிருஷ்ணனும் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share this:

Related posts

அடிதூள்: சேலம், தேனி, திருப்பூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி… அசத்தும் தமிழக அரசு…!!

NEWSKADAI

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…!!

NEWSKADAI

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ‘கொரோனா’ மரணம்… சோகத்தில் துடிதுடிக்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்…!

AMARA