Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

Share this:

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இருபெரும் கட்சியினுடைய தலைவர்கள் மறைவிற்குப் பின் தமிழகம் சந்திக்கவிருக்கும் மிக முக்கிய தேர்தல் களம் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்.

இந்நிலையில் தமிழக பாஜக வின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காணொலி மூலம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றுகின்றனர். தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வந்தாலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக பாஜக இடையே மட்டுமே போட்டி என்றும் கூறி வருகின்றனர்.

திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி, ஆயிரம் விளகக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி.லட்சுமணன் போன்ற அரசியல் பிரபலங்கள் கட்சி மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் களத்தில் செயலாற்றும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

சேலம் கடைக்காரர்களே உஷார்: முன்னெச்சரிக்கை இல்லை என்றால் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மாநகராட்சி…!

MANIMARAN M

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN