Newskadai.com
இந்தியா

“வெட்கங்கெட்ட ஆட்சி”… முற்றும் சிவசேனா – பாஜக மோதல்…!!

Share this:

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் எங்கள் அரசாங்கம் ஆட்சியை இழக்கும் என்ற கருத்து சொல்லி வரும் எதிர்கட்சிகளுக்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக பதிலளித்துள்ளார், “எதிர்கட்சிகள் எங்களது அரசாங்கத்தை கவிழ்ப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக அவ்வாறு செய்பவர்கள் தான். எனது முதல்வர் இருக்கை பசைப் போட்டு ஒட்டப்படவில்லை, எனது அரசின் எதிர்காலம் எதிர்கட்சிகளின் கைகளில் இல்லை. எனது கூட்டணி அரசு ஒரு முச்சக்கர வண்டி, அதனுடைய ஸ்டீயரிங் என்னுடைய கட்டுபாட்டில் இருக்கின்றது, அனைத்து சக்கரங்களும் ஒரே திசையில் பயணிக்கிறது, என்று நேற்று சாம்னாவுக்கான பேட்டியில் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே மறைமுகமாக பாஜவை சாடியுள்ளார்.

மேலும், பிரதமரின் கனவுத்திட்டமான மும்மை அஹமதாபாத் புல்லட் ரயில் திட்டம் ஒரு சில மனிதர்களுக்கானது, இது பொது மக்களுக்கானது அல்ல, இத்திட்டம் தேவையில்லை என்றும், அதை எதிர்க்கும் விவசாயிகளுக்கே தன் முழு ஆதரவும் என்றும் கூறியிருந்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியை கடும் சொற்களால் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “மகாராஷ்டிர மாநில அரசியல் கூட்டணிக்குள் சண்டையும் உட்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது. அங்கு வெட்கங்கெட்ட ஆட்சி நடக்கிறது. அரசு பலவிஷயக்களில் தோல்வி அடைந்து வருகிறது. அவர்களின் உண்மையான நோக்கத்தையும் சுயநலத்தையும் அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். அம்மாநில அரசின் படுதோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் செயலாற்ற வேண்டும் என்று உத்தவ் தாக்கரேக்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.


Share this:

Related posts

தனி கட்சி முதல் ஜனாதிபதி வரை… பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

MANIMARAN M

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

கொடுந்தீக்கு பலியான கொரோனா நோயாளிகள்… ஆந்தராவில் நடந்த பகீர் சம்பவ வீடியோ

MANIMARAN M

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M