Newskadai.com
இந்தியா

கொரோனா வைரஸ் போயே போச்சு.!! பாஜக தலைவரின் அதிரடி பேச்சு…!!

Share this:

கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது, பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கவே மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்க கடும் முயற்சி மேற்கொண்டுவருகிறது. ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹூக்ளி மாவட்டத்தில் மிட்னபூர் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா போயே போய்விட்டது, அந்த வைரஸ் ஒழிந்துவிட்டது. பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கவும், பாஜகவினர் பேரணி நடத்துவதைத் தடுக்கவுமே முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கை விதித்துவருகிறார். இந்த மாநிலத்தின் மக்கள் அனைவரும் எங்கள் பக்கமே உள்ளனர். அதனால் எங்களை யாரும் தடுத்து நிறுத்தி விடமுடியாது.

2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும். பின்னர் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம். சில மாதங்கள் பொறுத்திருங்கள், மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்காலம் மாறப்போகிறது. மேற்கு வங்கத்தை தங்க வங்கமாக மாற்றுவோம் என தொண்டர்கள் மத்தியில் பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசினார். மேற்கு வங்கத்தில் இதுவரை 1,93,175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 3771 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 3,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share this:

Related posts

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்…

MANIMARAN M

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M