Newskadai.com
அரசியல்

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

BJP
Share this:

2021ல் நடக்கவுள்ள சட்டமன்ற தோர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று இரவு முதலமைச்சரை திடிரென சந்தித்து பேசியுள்ளார் இது அரசியல் வட்டாரங்களுக்குகிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல், உள்ளாட்சி  தேர்தல்களில் கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தல் களத்தை பாஜக சந்தித்து வருகிறது. வெற்றி கிட்டவில்லை என்றாலும். வரும்  சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகையைச்சூட பல்வேறான ஆயுத்தங்களை கையாண்டு வருகிறது பாஜக.
அதன் அடிப்படையில்தான் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பாஜக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு தருவதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக திமுக தரப்பில் இருந்து தாங்கள் விமானத்தை பரிசாக அளித்தாலும்  வெற்றி பெற முடியாது என்றவாறு  விமர்சனங்களை வெளியிட்டனர்.
இதைதொடர்ந்து அதிரடி அரசியல் சூடுபிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள பழனிசாமி அவர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதுகுறித்து அரசல் புரசலான தகவல் வெளியானது. இவர்களுக்கிடையே அரசியல் காரணங்களுக்கான சந்திப்பா? அல்லது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Edappadi

இது குறித்து பாஜக மாநில தலைவரான எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில். தற்போது கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து பேசியதாகவும். அதில் விநாயகர் சிலைகளை வழிபட்டு ஊர்வலமாக செல்லாமல் சிலைகளை மட்டும் கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு சொல்வதாக முதலமைச்சர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி பண்டிககை தொடர்பாக மட்டுமே பேசினோம். இதில் அரசியல் இல்லை என்றும், இந்த சந்திப்பு மிகவும்  திருப்திகரமாக இருந்ததாக  தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் தமிழக  அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தடையை விலக்க வேண்டும் என இந்து அமைப்புகள் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Share this:

Related posts

இனி இவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு… மு.க.ஸ்டாலின் அதிரடி…!

AMARA

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

MANIMARAN M

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

நாளை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடல் வைப்பு… மக்கள் அஞ்சலிக்காக சிறப்பு ஏற்பாடு…!

AMARA

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா..?

MANIMARAN M

புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத ஒன்று – நாராயணசாமி அதிரடி கருத்து…!!

POONKUZHALI