Newskadai.com
தமிழ்நாடு

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

Share this:

கோவை மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நடமாடும் நூலகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தலைவர் எல்.முருவன்.  பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது, புதிய கல்வி கொள்கையானது தாய் மொழி கல்வியையும், தொழிற்கல்வியையும் ஊக்குவிக்கின்றது. மும்மொழி கல்வி தமிழகத்தில் இருக்கும் சி.பி.எஸ்.இ, மெட்ரிக் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.

அரசு பள்ளிகளில் மட்டும்தான் மும்மொழி கல்வி இல்லை. அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் இதனால் இன்னொரு மொழி படிக்க முடியாமல் இருக்கிறது. பிரதமரின் விவசாய திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றியை முடிவு செய்யும் கட்சியாக பாஜக இருந்தது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் எம்.எல்.ஏவாகவும், அமைச்சர்களாகவும் சட்டமன்றத்திற்கு செல்வார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைதேர்தலுக்கும் பாஜக தயாராகவே உள்ளது என்று கூட்டத்தினரிடையே பேசினார்.


Share this:

Related posts

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

AMARA