Newskadai.com
இந்தியா

டிஸ்லைக்குகளை குவிக்கும் பிரதமரின் வீடியோக்கள்… அழுகுனி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக…!!

Share this:

கொரோனா பரவல் அதிகரிப்பு, பொருளாதார பின்னடைவு, பி.எம்.கேர் நிதி எதிர்ப்பு, ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான எதிர்ப்பு, ஜிடிபி சரிவு என பல முனைகளிலிருந்தும் மத்திய அரசிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் பிரதமரின் மன் கீ பாத் ரேடியோ நிகழ்ச்சியிலும், அவ்வப்போது நாட்டு மக்களுக்கு காணொளி காட்சி மூலமும் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் நிகழ்ச்சியில் கொரோனா தொற்று, வெள்ள பாதிப்பு ஆகியவற்றால் ஜேஇஇ, நீட் தேர்வு ஒத்திவைப்பு, பொருளாதார சரிவு குறித்து பேசுவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சிப்பிப்பாறை நாய் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசினார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். சமீப காலமாக இதுப் போன்ற பிரதமரின் காணொளிகளுக்கு சமூக வலைதளங்களில் அதிக டிஸ்லைக்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாஜகவை பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த காணொளிகளில் உள்ள கமென்ட்டுகளை நீக்கியது, மேலும் மற்ற காணொளிகளில் டிஸ்லைக் ஆப்ஷனை இல்லாமல் பாஜக நீக்கியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், டிஸ்லைக்கையும் கமென்ட்டையும் வேண்டுமானால் முடக்கிவிடலாம். ஆனால் மக்களின் குரலை நிறுத்த முடியாது என்று பாஜகவை குறிப்பிடாமல் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Share this:

Related posts

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA

அபராதம் மூலம் அபார வருவாய் ஈட்டிய ரயில்வே… டிக்கெட் இல்லாத பயணிகளிடம் ரூ.561 கோடி வசூல்…!!

MANIMARAN M

துணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

MANIMARAN M